எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெஜ் நூடில்ஸ்


செய்முறை

வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய் - தலா 1/4 கப்
நீளவாக்கில் (ஜூலிஎட்ஸ் என்பர்) வெட்டி வைக்கவும்
4 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க வைக்கவும்.
பின் 1 பாக்கட் நூடில்ஸை போட்டு வேகவிட்டு, வடிகட்டி, குளிர்ந்த நீரில் காட்டி, வடித்து வைக்கவும்.



பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, பூண்டு, மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பின் கேரட், குடைமிளகாய், உப்பு தூவி வதக்கி, கோஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி

அதனுடன் நூடில்ஸ் மற்றும் நூடில்ஸ் பொடி சேர்த்து பிரட்டி, சூடாக சாஸ் மற்றும் மன்சூரியனுடன் பறிமாறவும்.

நூடில்ஸ் பொடிக்கு பதில் சோயாசாஸ், டொமாடோ சாஸ் ஊற்றி பிரட்டி செய்யலாம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...