எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சேமியா பாயாசம் / Semia payasam




செய்முறை

1 கப் சேமியாவை வறுத்து, 2 கப் கொதிக்கும் தண்ணீரில் தூவினாற் போல் சேர்த்து கலந்து , சேமியாவை வேகவைக்கவும்.
பிறகு 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும், கரைந்ததும், 2 மே.கரண்டி கண்டென்ஸ்ட் மில்க் , பால் தேவையான அளவு சேர்த்து, சிறிது சுண்ட விடவும்.


ஏலக்காய் தூள் சேர்த்து , அடுப்பை அணைக்கவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு, முந்திரி சேர்த்து வறுக்கவும், 
முந்திரி பாதி சிவப்பு ஆகும் பொழுது, கிஸ்மிஸ்ஸை சேர்த்து பொரித்து, பாயாசத்தில் சேர்க்கவும்.

விருப்பப்பட்டால் குங்குமப்பூ சேர்க்கலாம்.

குறிப்பு:
பாயாசத்தை பொறுத்தவரை, 1 கப் சேமியா (அ) ஜவ்வரிசி என்றால் 1 கப் சர்க்கரை சேர்க்கவும்.
இங்கு கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்ததால் சர்க்கரையின் அளவை குறைத்துள்ளேன்.

பாலில் சர்க்கரையை சேர்க்கும் பொழுது, அடுப்பை மிக குறைவாக வைத்து சேர்க்கவும், இல்லையேல் பால் திரிய வாய்ப்புண்டு.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...