செய்முறை
முதலில் பரோட்டாவை செய்து வைத்து கொள்ளவும்.
பின்
தயார் செய்த 4 பரோட்டாக்களை நறுக்கி வைக்கவும்.
1 ஸ்பூன் மிளகாய் தூள், சிறிது கலர், சீரகதூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலா, மல்லிதூள் தயாராக வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம், சதுரமாக வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் 1 தக்காளி நறுக்கியதை சேர்த்து வதக்கி, அணைத்து தூள்களையும் சேர்த்து வதக்கி, 1/2 கொடைமிளகாயை சதுரமாக நறுக்கி சேர்த்து வதக்கவும்,
உப்பு கொத்தமல்லி சேர்த்து , சிறிது நேரம் சிம்மில் வைத்து வதக்கவும்
தொக்கு போல் ஆனதும் பரோட்டா துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.
கொத்தமல்லி தூவி, சூடாக பறிமாறவும்.
தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment