செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசியை, 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அரிசி ஊறிக்கொண்டிருக்கும் பொழுது,
1/2 கட்டு கொத்தமல்லி இலை
இஞ்சி , பூண்டு - 6 துண்டுகள் (அ) விழுது - 1 டே.ஸ்பூன்
பச்சை மிளகாய்-3
இவற்றை விழுதாக அரைக்கவும்.
பின் குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை, முந்திரி தாளிக்கவும்.
பின் 1/2 கப் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் கொத்தமல்லி விழுதை சேர்த்து, நன்கு வதக்கவும்.
பின் அரிசியை ஊறவைத்த தண்ணீரை ஊற்றி, கொதி வரும் பொழுது அரிசியை சேர்த்து, உப்பு சேர்த்து மூடி, 1 விசில் ஹை ஃப்லேமில் விட்டு, சிம்மில் 5 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு: தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து செய்யலாம்.


No comments:
Post a Comment