செய்முறை
1/4 கப் துருவிய தேங்காயுடன் 2 பல் இஞ்சிபூண்டு, 2 வரமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம், மிளகு, 1 ஸ்பூன் மல்லி தூள், 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பை சேர்த்து விழுதாக அரைத்து,
புளித்த 1/2 லிட்டர் மோருடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, 1/2 கப் சின்ன வெங்காயம், 1 கப் நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கி, உப்பு சிறிது சேர்த்து, மூடி காய் வேகும் வரை விடவும்.
காய் வெந்த பின், மோர்க்கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போய் , குழம்பு பதம் வரும் வரை விட்டு (5 முதல் 10 நிமிடம்) கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
No comments:
Post a Comment