செய்முறை
1 கப் அரிசியுடன் 1/4 கப் துவரம் பருப்பை நன்கு ஊறவைக்கவும்.
1/2 கப் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் - 5, 1/4 ஸ்பூன் சீரகம், உப்பு, தயாராக வைக்கவும்.
பின் 1/4 கப் கோதுமைரவையை எடுத்து வைக்கவும்.
அரிசியை நீண்ட நேரம் ஊறவைத்தால், சீக்கிரம் மிக்சியில் அரைபட்டுவிடும்.
அரிசிபருப்பை தண்ணீரில்லாமல் வடிகட்டி, அதனுடன் வெங்காயத்தை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக நைசாக அரைக்கவும், பின் கடைசியாக வெங்காயத்தை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
மாவு கெட்டியாக, வடை தட்டும் பதத்திற்கு இருக்க வேண்டும்.
பின் எண்ணெயை காய வைத்து,
கையை தண்ணீரில் நனைத்து, மாவை மிக மெல்லியதாக தட்டி,
எண்ணெயில் பொறிதெடுக்கவும்.
குறிப்பு:
மாவை மெல்லியதாக தட்டினால் தான் ஆமையின் ஓடு போல் நன்கு உப்பி வரும்.
வடையின் உள் பூரியை போல் இருக்கும்.
No comments:
Post a Comment