எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பால் பாயாசம் (Basmathi rice kheer )


செய்முறை


1/4 கப் பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, 
பின் கையால் நன்கு குருனையாக ஆகும் வரை மசித்து வைக்கவும்.


சிறிது சர்க்கரையுடன் 4 அ 5 ஏலக்காய், முந்திரி பாதாம் சேர்த்து பொடித்து வைக்கவும்.

பின் 1/2 லிட்டர் பாலில் சிறிது நீர் கலந்து காய வைக்கவும்.


பின் அடுப்பை சிம்மில் வைத்து அரிசியை சேர்த்து, மிதமான சூட்டில் அரிசி வேகும் வரை விடவும்.
பால் பொங்கி பொங்கி வரும், கலந்து விடவும்.


அரிசி நன்கு வெந்ததும், 1/2 கப் கண்டென்ஸ்ட் மில்க் (மில்க்மைட்) சேர்த்து கலக்கவும், பின் பொடித்த தூளை சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விடவும்.

குறிப்பு:
மில்க்மைடை அவரவர் சுவைக்கு தேவையான அளவுக்கு ருசி பார்த்து சேர்க்கவும்.

எப்பொழுதும், பாலில் பிறபொருட்களை சேர்க்கும் பொழுது, அடுப்பை சிம்மரில் வைக்கவும், இல்லையென்றால் அதிக சூட்டில் பால் திரிய வாய்ப்புண்டு.


பின் நறுக்கிய முந்திரி பாதாம், திராச்சை , தேவையான உலர் பொருட்களை சேர்த்து நன்கு கலந்து , சூடாக பறிமாறவும்.

குளிர்பானத்தில் வைத்து பறிமாறினால் மிக சுவையாக இருக்கும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...