எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பஜ்ஜி மிளகாய் கோபி



செய்முறை

முதலில் 1/2 காலிஃப்லவரை சுத்தம் செய்து, 3/4 வேக்காடு வேகவைத்து வைக்கவும்.

பின்


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, ஜீரகம் தாளித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.பிறகு 1/2  ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய  1 தக்காளி, 5 பஜ்ஜிமிளகாய் சேர்த்து வதக்கி, அதனோடு 2 ஸ்பூன் கறிமசாலா பொடி , சிறிது மஞ்சதூள் , தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்


வதங்கியதும், வேகவைத்த காலிப்பூவை சேர்த்து, கொத்தமல்லி தூவி, மசாலா காயில் பிரண்டு வரும் வரை கிளறி, கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.


இது சப்பாத்தி, ப்ரெட், தோசை, சாதவகைகளுடன் பறிமாறலாம்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...