செய்முறை
முதலில் 1 கப் சோளமாவுடன் (வெள்ளை சோளம்) , 1/2 கப் கோதுமைமாவு, உப்பு, சிறிது சீரகம், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கரம்மசாலாதூள், பொடியாக நறுக்கிய ( 1/2 கப் வெங்காயம், 1 பச்சைமிளகாய், 1/2 கப் வெந்தயகீரை), 2 ஸ்பூன் நல்லெண்ணெய், 1 துளி மஞ்சதூள்
சேர்த்து நன்றாக பிசறிவிட்டு, அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்து, 10 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் தோசைக்கல்லை மிதமான காய்ச்சலில் வைத்து, ஊத்தப்பம் செய்து,
சூடாக சட்னி, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
மிகவும் சத்தானது.
No comments:
Post a Comment