எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கெலகோஸ் மல்லி குருமா / Brussel sprouts kurma



செய்முறை


கெலகோஸை கழுவி 4ஆக வெட்டவும்

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, 1 பெரிய வெங்காயம், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைக்கவும், 
அந்த சூட்டிலேயே 
1/2 கப் கொத்தமல்லி தழை, மஞ்சதூள், 1 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, முந்திரி, 1/4 கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கரம்மசாலா அல்லது சிக்கன் மசாலா தூள் சேர்த்து, பிரட்டி, 
ஆறியவுடன் அரைத்து வைக்கவும்.



பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து
நறுக்கிய 1 வெங்காயம், 1 கப் கெலகோஸ் சேர்த்து வதக்கி, அதனுடன் வேகவைத்து உதிர்த்த 1/2 கப் ஸ்வீட் கார்னை சேர்த்து, உப்பு சேர்த்து மூடி காய் 3/4 பதம் வேகும் வரை விடவும்.


பின் 1/4 கப் தக்காளி சேர்த்து லேசாக  வதக்கி, அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு மற்றும் பாவ்பாஜி மசாலா 1/2 ஸ்பூன் தூவி
5 நிமிடம் மூடி வைத்து அடுப்பை அணைக்கவும்.



இதை சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், தோசையுடன் பறிமாறலாம்





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...