செய்முறை
1 முட்டையை, 3/4 கப் சர்க்கரை தூளுடன் நன்கு மிருதுவாகும் வரை அடிக்கவும்.
அதனுடன் மசித்த 1/2 கப் வாழைப்பழம் மற்றும் 1/2 கப் இலகிய வெண்ணெய் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
குறிப்பு:
முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் வாழைப்பழத்தை 1/2 கப் கூட சேர்த்து செய்யவும்
இதனுடன் 1 கப் கோதுமைமாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி, சிறிது கிஸ்மிஸ் சேர்த்து ,
வெண்ணெய் தடவி , மாவு தூவிய கேக் டின்னில் ஊற்றி,
பாதாம் கிஸ்மிஸ் தூவி
ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 200" செ, 10 - 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் , எதுவும் ஒட்டாமல் வரும், வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு:
விருப்பப்பட்டால் இக்கலவையில் 1/2 ஸ்பூன் பேக்கிங் பொடி சேர்க்கலாம்.
டின்னிலிருந்து தட்டத்திற்கு மாற்றி, ஆற விட்டு , துண்டுகளாக்கி பறிமாறவும்.
நன்றாக பழுத்த பழத்தை சேர்த்ததால், சுவை, மணத்தோடு
மிருதுவாக இருக்கும்
No comments:
Post a Comment