எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சிக்கன் புலாவ் / Chicken pulao



செய்முறை

250 கி  சிக்கன் துண்டுகளை
1 மேஜைகரண்டி கெட்டி தயிர், உப்பு, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 4 பச்சைமிளகாய், பட்டை லவங்கம் ஏலக்காய் தலா -2, 
கொத்தமல்லி தழை
சேர்த்து பிரட்டி , 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்


பின் 200 கி பாஸ்மதி அரிசியை கழுவி, 175 மி  தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்

ஒரு குக்கரில் 1 கரண்டி எண்ணெய் விட்டு, பட்டை லவங்கம் தாளித்து, 1 வெங்காயம் நறுக்கியதை பொன்னிறமாகும் வரை வதக்கி, அதில் ஊறிய சிக்கன் கலவையை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.





சிக்கன் 1/2 வேக்காடு வந்ததும், அரிசியை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து, உப்பு கொத்தமல்லி தூவி, சிறிது நெய்,சேர்த்து கலந்து, மூடி 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்,



சுவையான புலாவ் தயார், இதை கெலகோஸ் குருமா மற்றும் சில்லி சிக்கன் வைத்து பறிமாறவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...