எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பூண்டு தொக்கு





தேவையான பொருட்கள்:


 (பொருட்களை 200 மி.லி கப்பில் அளக்கவும்)


பூண்டு மிக்சியில் லேசாக மசித்தது – 2 கப்


எலுமிச்சை சாறு – 1/2 கப்

மிளகாய் தூள் - 1/2 கப் (காரம் குறைவாக விரும்பினால் சிறிது குறைக்கவும்)


கல் உப்பு – 70 மி.லி
நல்லெண்ணை – 200 மி.லி

கடுகு - தாளிக்க

சிறிது வெல்லம், மஞ்சள் தூள் சேர்க்கலாம்.

வறுத்து பொடி செய்ய:


சீரகம்- 1 டீஸ்பூன்

வெந்தயம்- ¾ டீஸ்பூன்

மல்லிவிதை- 2 டீஸ்பூன்



இம்மூன்றையும்


வெறும் வானலியில் தனித்தனியாக , மிதமான


தனலில் வறுத்து பொடி செய்யவும்.



பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்


இவை அணைத்தையும் தயாராக வைக்கவும்.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து
நசுக்கிய பூண்டை சேர்த்து மிதமான தனலில் நன்கு வதக்கவும்
பின் குறிப்பிட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து 1 வதக்கு வதக்கி
எலுமிச்சை சாறு சேர்த்து
குறைந்த தனலில் 5 நிமிடம் வைத்து, எண்ணெய் விட்டு வரும் பொழுது, அடுப்பை அணைக்கவும்.




ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இட்லி தோசை சாத வகைகளுடன் சுவையாக இருக்கும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...