எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சோலே மேத்தி



செய்முறை

1 கப் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து வைக்கவும்.

பின் குக்கரில் நறுக்கிய 2 வெங்காயம், 2 தக்காளி, முந்திரிகள் சேர்த்து 2 விசில் விட்டு, தண்ணீர் இல்லாமல், அரைத்து வைக்கவும்.


பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, 1 வெங்காயம் நறுக்கியதை சேர்த்து வதக்கவும், பின் 1 கப் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து வதக்கி
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சதூள்

சேர்த்து பிரட்டி, அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.




வதங்கியதும், வேகவைத்த கடலையை அந்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து , 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி, சர்க்கரை தூவி இறக்கவும்.


நான், ரோட்டி, புலாவுடன் பறிமாற மிக சுவையாக இருக்கும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...