செய்முறை
ஓவனை 200*செ ப்ரீஹீட் செய்யவும்.
கோதுமை மாவு- 1 கப்
தேங்காய் மாவு - 1/4 கப் ( Coconut flour கடைகளில் கிடைக்கும்)
பேக்கிங்க் பொடி - 1 டீஸ்பூன்
இவை மூன்றையும் சலித்து வைக்கவும்.
[
குறிப்பு
தேங்காய் மாவு செய்முறை:
தேங்காய் பால் எடுத்தவுடன், தேங்காய் சக்கையை ஒரு தட்டில் போட்டு , ஓவனில் வைத்து, அதை காயும் வரை வைத்து எடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.
கேக் செய்ய பயன்படுத்தலாம்.
1/2 கப் பூசணிகாய் துண்டுகள்
1/4 கப் தேங்காய் துருவல்
3/4 கப் சர்க்கரை
இவை மூன்றையும் மிக்சியில் அரைக்கவும்.
இதனுடன் 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
பின் சலித்த மாவு, அரைத்த விழுது, 1/2 கப் பால்
இவை மூன்றையும் ஒரு புறமாக , சமமாக கலக்கவும்.
பின் மாவின் தன்மைக்கேற்ப ஆயில் 1/4 கப் முதல் 1/2 கப் வரை சேர்த்து,
சாக்கலேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு: பஜ்ஜி மாவு பதம் கலவை இருக்கும்.
மிகவும் கெட்டியாக இல்லாமல், தளர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
கலவையை கப்களில் 1/2 கப் ஊற்றி, 12 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் பேக் செய்யவும்
கத்தி அல்லது ஃபோர்க் விட்டால், எதுவும் ஒட்டாமல் வரும்.
தயார் என்று அர்த்தம்.
ஆறவைத்து பறிமாறவும்.
No comments:
Post a Comment