எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஆலூ மேத்தி - 2




செய்முறை

2 உருளைக்கிழங்கை தோல் சீவி, நறுக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து வைக்கவும்.

பின் குக்கரில் நறுக்கிய 2 வெங்காயம், 2 தக்காளி, முந்திரிகள் சேர்த்து 2 விசில் விட்டு, தண்ணீர் இல்லாமல், அரைத்து வைக்கவும்.



பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, 1 வெங்காயம் நறுக்கியதை சேர்த்து வதக்கவும், பின் 1 கப் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து வதக்கி
 மஞ்சதூள்

சேர்த்து பிரட்டி, அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.


பின் வேகவைத்த கிழங்கை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கடைசியாக 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்




சப்பாத்தி, புல்கா, நாண், தோசை ,புலாவுடன் பறிமாறலாம்




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...