செய்முறை
குக்கரில் 1 கப் பாஸ்மதி அரிசிக்கு, 1 3/4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் 1 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ஹையில் 1 விசில் விட்டு,
சாதத்தை உதிரியாக வைக்கவும்.
பின் ஒரு கடாயில் 1 கரண்டி எண்ணெய்+நெய் விட்டு, 2 பட்டை, லவங்கம்,ஏலக்காய் தாளித்து,
1 பெரிய வெங்காயம், 4 பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,
1 கட்டு பாலக்கீரையை சுத்தம் செய்து , நறுக்கி சேர்க்கவும், சிறிது உப்பு சேர்த்து வதங்கியதும்,
அடுப்பை சிம்மரில் வைத்து,
சாதம் சேர்த்து சமமாக பிரட்டி விடவும்.
சூடாக பறிமாறவும்
இதனுடன் பன்னீர் க்ரேவி, ரைத்தா சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment