செய்முறை
1 கட்டு பாலகீரை மற்றும் 1 கைபிடி கொத்தமல்லி தழையை நீரில் 2 நிமிடம்
வேகவைத்து, உடனே வடித்து, குளிரவைத்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து,
பொடியாக நறுக்கிய 1 வெங்காயம் , 2 பச்சைமிளகாய் சேர்த்து,
நன்றாக வதக்கவும், பின் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி,
1/2 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்,
பின் 1 மேஜைகரண்டி Homemade masala powder
சிறிது மஞ்சதூள் சேர்த்து வதக்கி
1/4 கப் தயிர் சேர்க்கவும், 1 நிமிடம் வதக்கி
பின் அரைத்த கீரை விழுது, உப்பு
சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,
1 கட்டி வெண்ணெய் மற்றும் 1/4 ஸ்பூன் கஸூரி மேத்தி சேர்த்து
கொதிவரும் பொழுது, 150 கி பன்னீரை சேர்த்து கலந்து ,
5 நிமிடம் சிம்மரில் வைக்கவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பாலக் ஹராதனியா பன்னீர் தயார்
இதனை நாண், புல்கா, புலாவ், .........வுடன் பறிமாறலாம்
No comments:
Post a Comment