செய்முறை
1. கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்து,
பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
சேர்த்து வதக்கி, அதனுடன்
1 கப் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்
2. கீரை வதங்கியதும் 1 நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
3. அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சதூள், 1/2 ஸ்பூன் கரம்மசாலா பொடி, 1 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி நன்றாக மசிந்து, மசாலா பச்சை வாசனை போனதும்
5. 4 முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
6. இதனுடன் சாதம் சேர்த்து பிரட்டி, பாலக் முட்டை சாதம் என குழந்தைகளுக்கு பறிமாறலாம்.
டிபன்பாக்ஸிற்கு எளிதில் செய்ய கூடிய சத்தான உணவு..
7. தோசையில் அல்லது சப்பாத்தியில் வைத்து ரோல் செய்து காலையில் அல்லது மாலையில் பாலக் முட்டை ரோஸ்ட் என தரலாம்.
ப்ரெட் வகைகளுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment