எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பன்னீர் பாஜி / Paneer bhaji



செய்முறை
2 வெங்காயம், தக்காளியை குக்கரில் வேகவைத்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக்கி வைக்கவும்
தண்ணீரை தனியாக வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து
1 வெங்காயம் நறுக்கியதை சேர்த்து வதக்கவும்.
பின்
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி,
அதனுடன்
2 ஸ்பூன் பாவ்பாஜி மசாலா பொடி
1 ஸ்பூன் ஆச்சி சிக்கன் மசாலா தூள்
1/2 ஸ்பூன் தனியா தூள்
1/4 ஸ்பூன் மிளகாய்தூள்
மஞ்சதூள்
சேர்த்து வதக்கி, உடனே 
அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

எடுத்து வைத்த தண்ணீரை சேர்த்து, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு
நறுக்கிய பன்னீர், 1/4 கப் குடைமிளகாய், தக்காளி(விதை நீக்கி)
கஸூரி மேத்தி சேர்த்து, மிதமான தனலில், 5 நிமிடம் மூடி வைத்து , அடுப்பை அணைக்கவும்

குறிப்பு: பாவ் பன்னுடன் சாப்பிட, 
பன்னீரை துருவி சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்


கடைசியாக 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, கொத்தமல்லி தூவவும். 


இதனை பாவ் பன், ப்ரெட் டோஸ்ட், நாண், ரோட்டி, ஃபுல்கா, புலாவுடன் 
பறிமாறலாம்





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...