எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வீட் ப்ரெட் சிக்கன் டொஸ்ட் / Wheatbread chicken toast



செய்முறை
சிக்கனை சிறுசிறு துண்டுகளாக்கி உப்பு, மசாலாதூள் சேர்த்து , கடாயில் வதக்கி வேகவைக்கவும்.

ஓவனை ப்ரீஹீட் செய்து வைக்கவும்( பேக்கிங்க் மோடில் 200*செ)

கோதுமை ரொட்டியை லேசாக ஒவனில் வைத்து எடுத்து (30 வினாடிகள்)
அதன் மேல் தேவையான சாஸ் தடவி, 
நறுக்கிய தக்காளி, குடைமிளகாய்,
சிக்கன் தூவி
அதன் மேல் துருவிய மோசரலா சீஸ், சில்லி ஃப்லேக்ஸ், ஆரிகானோ தூவி
5 நிமிடம் ஓவனில் ,
சீஸ் உருகும் வரை வைத்து எடுத்து  பறிமாறவும்
(விருப்பப்பட்டால் மேலே ஒரு ரொட்டி வைத்து பறிமாறவும்)

சில்லிஃப்லேக்ஸ்:
காய்ந்த மிளகாயை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து , ஒரு டப்பாவில் வைத்து கொண்டால் , தேவையான பொழுது உபயோகிக்கலாம்.


சுவையான சத்தான பீஸா ஸ்டயில் டோஸ்டை , குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பர்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...