செய்முறை
டேகோஸ் என்பது மெக்சிகன் உணவு வகை, கோதுமை அல்லது சோளமாவில் சப்பாத்தி போல் செய்த டார்டிலாசில் காய்கள், சால்சா அல்லது அசைவம் வைத்து தருவர்
சுலபமாக வீட்டில் செய்ய ஒரு செய்முறை:
முதலில் தக்காளி, பச்சைமிளகாயை சுடு நீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும், இது சால்சா .
பின் டார்டிலா செய்ய:
கோதுமைமாவு + சிறிது மைதா மாவு -1 கப்
உப்பு
2 ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய்
பேக்கிங்க்பொடி - சிறிது
இவை அணைத்தையும் கலந்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து , சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின் காய்களை தயாராக வைக்கவும் காய் கலவை செய்முறை(இதை அமுக்கவும்)
நான் இங்கே சிக்கன் சேர்க்காமல், உருளைக்கிழங்கு சேர்த்துள்ளேன்
பின்
மாவை உருட்டி, சப்பாத்திகளாக திரட்டி , தவாவில் சுடவும்.
டார்டிலாஸ்களை தயார் செய்து ஹாட்பாக்ஸில் வைக்கவும், 3/4 பதம் வேகவைத்தால் போதும்.
எண்ணெய் சேர்க்காமல் அதிக சூட்டில் , கல்லில் போட்டு எடுத்தால் மிருதுவாக வரும்.
இதனை டார்டிலா என்பர்.
பறிமாறும் பொழுது டார்டிலாக்களை க்ரில்லில் போட்டு எடுத்து
அதன் மேல்
தயார் செய்த சால்ஸாவை 1 ஸ்பூன் தடவி, அதன் மேல் சாலட் வைத்து, ஃப்ரென்ச்ஃப்ரைஸ் வைத்து, துருவிய சீஸை தூவி ,
பாதியாக மடித்து அல்லது சுருட்டி பறிமாறவும்.
குழந்தைகள் விரும்பி உண்பர்.
சுவையானதும் சத்தானதும் கூட.....
இதே டார்டிலாவில் சால்ஸா தடவி, சாலட் சீஸ் வைத்து உருட்டி மடித்து
பரிட்டோஸாக பறிமாறலாம்.
( பொதுவாக இதனுள் சாதம் பீன் வகைகள் உள்ளே வைத்து செய்வார்கள்)
ஸ்ட்ஃப் செய்ததை மீண்டும் சீஸ் உருகும் வரை க்ரிஸ்ப் செய்து க்வெசடில்லா வாக பறிமாறலாம்
No comments:
Post a Comment