எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் மஃபின்ஸ்( eggless, with curd )



செய்முறை

முதலில் ஓவனை 180*செ ப்ரீஹீட் செய்யவும்.

1 கப் மைதாவுடன், 3/4 கப் சர்க்கரைதூள், 1 டீ.ஸ்பூன் பேக்கிங்பொடி
1/4 கப் கோகோ பொடி சேர்த்து 
நன்றாக சலித்து வைக்கவும்

பின்
ஒரு பாத்திரத்தில், 1 கப் தயிரை நன்றாக அடிக்கவும்
அதனுடன் சலித்த மாவு கலவை மற்றும், 
1/2 கப் எண்ணெய் சேர்த்து , கலக்கவும்
மாவு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக இருக்க வேண்டும்.
எடுத்து விட்டால் ரிப்பன் போல் விழ வேண்டும்

 ( தயிரின் கெட்டி தன்மைக்கேற்ப ,தேவையான அளவு சேர்க்கவும் )


தயார் செய்த கலவையை கப்பில் 1/2 பகுதி வரை ஊற்றி,
ஓவனில் 10 முதல் 15 நிமிடம் பேக் செய்யவும்.
 (ஒரு குச்சியில் கேக்கின் நடுவே குத்தினால் , எதுவும் ஒட்டாமல் வரும்)

பின் வெளியே எடுத்து, லேசாக ஆற விட்டு, பறிமாறவும்





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...