செய்முறை
1 கப் கோதுமை மாவு
1/2 கப் மைதா மாவு
1/4 கப் உருக்கிய வெண்ணெய்
1/2 டீ.ஸ்பூன் பேக்கிங்க் பொடி
உப்பு
இவை அணைத்தையும் நன்றாக கலந்து, பின் வெது வெதுப்பான
நீர் சேர்த்து,பிசைந்து
5 நிமிடம் நன்றாக , மிருதுவாக பிசைந்து
2 மணி நேரம் ,மூடி வைக்கவும்.
ஓவனை 180*செ பேக்கிங் மோடில், ப்ரீ ஹீட் செய்யவும்.
பின் மாவை உருண்டைகளாக்கி, பூரிக்கு போல்,
சிறிது கெட்டியாக தேய்த்து,
சதுரமாக மாவை வெட்டி,பின் முக்கோணமாக வருமாறு
வெட்டி வைக்கவும்.
பின் Nutella வை தடவி, கீழ் இருந்து, உருட்டவும்.
பின் மாவின் மேலே வெண்ணெய் தடவி, பேக்கிங் தட்டில் வைக்கவும்.
ஓவனில் 10 முதல் 15 நிமிடம்
வேகும் வரை வைத்து எடுத்து, பறிமாறவும்.
குழந்தைகள் விரும்பி உண்பர்.
No comments:
Post a Comment