எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Muffins Varieties ( 3 in 1 Muffins)


செய்முறை

முதலில் ஓவனை 180*செல்சியஸில் கன்வெக்சன் மோடில், ப்ரீஹீட் செய்யவும்.
Preheat the oven at 180 degree celsius in convection mode.


தேவையான பழம், பருப்புகளை நறுக்கி வைக்கவும்

Chop the desired fruits and nuts.




கேக் கலவையை தயார் செய்து வைக்கவும்  :
பொருட்கள் அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

1.  1 கப் மைதா மாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங்பொடி சேர்த்து சலிக்கவும்.
இதனுடன் 1/2 கப் பொடித்த சர்க்கரை சேர்த்து , கலந்து வைக்கவும்.

2.  ஒரு பாத்திரத்தில் 
1 முட்டை, 1 ஸ்பூன் வென்னிலா எசன்ஸ், 1/2 கப் எண்ணெய்
( நான் ஆலிவ் எண்ணெய் சேர்த்தேன் )
விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்க்கவும்.

சேர்த்து நன்றாக அடிக்கவும்.

3. பிறகு அதில் மாவு கலவை மற்றும் பால் ( 1/4 முதல் 1/2 கப்)
சேர்த்து பஜ்ஜிமாவு பதம் வருமாறு கலக்கி வைக்கவும்.

இது தான் பேஸிக் கேக் கலவை.
 (  இதை அப்படியே கேக் டின்னில் ஊற்றி பேக் செய்தால் வென்னிலா கேக் )

Basic vanilla cake mixture:

To 1 cup of APF add a spoon of baking powder and sieve 3 times.
Add 1/2 cup of powdered sugar and mix evenly.
Keep this dry mixture aside.

Then

Beat together a egg with a spoon of Vanilla essence and 1/2 cup of olive oil well.
(can add butter or any oil instead of olive oil here)
Add dry ingredients and 1/4 to 1/2 cup of milk to make the batter.
It should not be too thick or thin.

Baking this mixture will give a soft spongy vanilla cake.
For varieties, we add desired fruits and nuts .....


Divide the cake mixture into 3 parts, 
Add 
chopped strawberry and chocochip in one part
crushed cornflakes and chocochip in one part and
chopped dates and walnuts in one part 

Mix well with batter, pour in muffins cup, 
sprinkle few on top too
Bake it for 20 mts till done at 180 degree celsius.

Test with a toothpick: Insert in cake , it should come out clean

1.  Strawberry chocochip muffins
2. Dates walnut muffins
3. Crunchy Cornflakes muffins

For step by step pictures , see below....



கேக் கலவையை மூன்றாக பிரிக்கவும்.

ஒரு பாகத்தில்

ஸ்ட்ராபெரி சாக்கோசிப் மஃபின்ஸ்:

கேக் கலவையில் நறுக்கிய ஸ்ட்ராபெரி மற்றும் சாக்கோசிப்பை
கலந்து, மஃபின்ஸ் கப்பில் 3/4 வரை ஊற்றி, 
மீண்டும் ஸ்ட்ராபெரி சாக்கோசிப் தூவி
20 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை, 180*செ   யில்
பேக் செய்யவும்.





ஒரு பாகத்தில்

பேரிச்சைபழம் வால்னட் மஃபின்ஸ்:

கேக் கலவையில் நறுக்கிய பேரிச்சைபழம் மற்றும் வால்னட்டை
கலந்து, மஃபின்ஸ் கப்பில் 3/4 வரை ஊற்றி, 
மீண்டும்  பேரிச்சைபழம் வால்னட் தூவி
20 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை, 180*செ   யில்
பேக் செய்யவும்.




ஒரு பாகத்தில்

கார்ன்ஃப்லேக்ஸ் சாக்கோ சிப் மஃபின்ஸ்:


கேக் கலவையில்  உடைத்த கார்ன்ஃப்லேக்ஸ் மற்றும் சாக்கோசிப்பை
கலந்து, மஃபின்ஸ் கப்பில் 3/4 வரை ஊற்றி, 
மீண்டும் கார்ன்ஃப்லேக்ஸ் சாக்கோசிப் தூவி
20 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை, 180*செ   யில்
பேக் செய்யவும்.

சாப்பிடும் போது க்ரன்சியாக இருக்கும்.



இதே போல் கேக் கலவையில் நாம் விரும்பும் பழம் பருப்புகளை சேர்த்து
விதவிதமாக ஒரே தடவையில் செய்து, குழந்தைகளை அசத்தலாம்.














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...