எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கோதுமைமாவு அல்வா ( Wheatflour Alva )


செய்முறை

1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில், 1/2 கப் நெய்யுடன் 1/4 கப் ஆயில் சேர்த்து சூடு செய்யவும்.
அதில் 3/4 கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதாமாவு, முந்திரி பருப்புகள் சேர்த்து
கட்டி தட்டாமல் கிளறவும்.

2. மிதமான தனலில் கிளறவும்.
மற்றொரு அடுப்பில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

3. முந்திரியின் நிறம் மாறுபட்டால் ( வறுத்த முந்திரி போல்)
மாவு வறுபட்டு விட்டது என அர்த்தம்.

4. பின் மாவைக் கிளறிக்கொண்டே , சுடுதண்ணீரை பக்குவமாக ஊற்றி
கிளறவும், 1 நிமிடத்தில் நீர் சுண்டிவிடும்.

5. சிறிது கலர் சேர்க்கவும்.

6. 1/2  ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
குறிப்பு: ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் மிக்சியில் அரைத்தால்,
நன்றாக தூளாகிவிடும்

7. உடனே 2 முதல் 2 1/2 கப் சர்க்கரை வரை சேர்த்து, நன்றாக கிளறவும்.
தேவைபட்டால் நெய் சிறிது சேர்க்கலாம்.

8. ஒட்டாமல் நன்றாக அல்வா திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைக்கவும்.


Heat 1/2 cup of ghee with 1/4 cup of oil in a wide thick vessel.
Add 3/4 cup of wheatflour with 1/4 cup of All purpose flour and few broken cashews.

Stir well in medium flame till flour gets fried.
When the colour of cashew changes, it means flour too fried well.

Now add 2 cups of hot water by stirring continuously, it becomes absorbed in few mts.

Add some food colour and 1/2 tsp of cardomom powder
Add 2 to 2 1/2 cups of sugar and stir altogether till done.

At this stage , can add some ghee if required

when the alva leaves the sides of vessel and 
if in rolling consistency , off the stove

Instant tasty Alva ready.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...