எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mutton Pulao ( மட்டன் புலாவ் )



செய்முறை


1/2 கப் தேங்காய் துருவலில் , பால் எடுத்து வைக்கவும்.

தலா 6 பல் இஞ்சிபூண்டு, 8 காய்ந்தமிளகாய்,2 பட்டை லவங்கம்,
1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் சீரகமிளகு, மஞ்சதூள்
இவற்றை மசாலாவாக அரைத்து வைக்கவும்.

குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை,  தாளிக்கவும்.
பின் 4 பச்சைமிளகாய் ,  1/2 கப் வெங்காயத்தை சேர்த்து,பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மசாலாவை  சேர்த்து வதக்கி, 
300 கிராம் மட்டனை சேர்த்து மிதமான தனலில் வதக்கவும்.
பிறகு தேங்காய் பாலை அளந்து சேர்த்து , (1 3/4 கப் வருமாறு பாலுடன் நீர் சேர்க்கவும்)
1 டீஸ்பூன் கல் உப்பு, சேர்த்து கலந்து
குக்கரை மூடி, மிதமான தனலில்
3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.




With 1/2 cup Scrapped coconut, take milk and add water to bring 1 3/4 cup in total.

Make a paste with 6 pieces of ginger and garlic each, 2 cinnamon ,cloves, 1 tsp aniseeds,
8 dry chillies, 1 spoon Dhaniya powder, few turmeric powder, 1/2 tsp of Cuminseeds and pepper.


Heat a laddle of oil  in a cooker, Season whole garam masalas.

Add 4  green chillies with sliced  onion,  saute well till onion becomes fried.
Add grounded masala and saute well till raw flavour goes off.
Then Add cleaned and chopped 300 gms of Mutton pieces, saute in medium flame.
Add coconut milk, 1 tsp of salt.

Close the lid and allow it to cook in medium flame till 3 whistles.
off the stove, Let it releases the pressure.


Then add Soaked rice ( 1 cup of Basmathi rice), add few salt, corianderleaves.
Close the lid and leave a whistle in high flame and off the stove.
or 

Add the rice with the cooked mutton , don't stir along,
Just shake the cooker.
When the grvy starts boiling, close the lid (with whistle  )
and keep in simmer for 15 to 20 mts.
Pulao is Ready.
Serve with Mutton fry, Raita.

Lunch box recipe for kids.


தயாரான மட்டனில் ஊறவைத்த 1 கப் பாஸ்மதி அரிசியை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது உப்பு, கொத்தமல்லிதழை சேர்த்து, 
அரிசியை முழுமையாக க்ரேவியுடன் கலக்காமல், கொதிவிடவும்.

கொதி வரும் சமயத்தில், குக்கர் மூடியை விசிலுடன் போட்டு, 
அடுப்பை முழு சிம்மில் வைத்து,
15 - 20 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.

கடையை போல் அரிசி ஒட்டாமல் பொழுபொழுவென இருக்கும்.

அல்லது 
அரிசியை மட்டனில் சேர்த்து கலந்து , ஹையில் 1 விசில் விட்டு, 
அடுப்பை அணைக்கவும்.

எளிதான மட்டன் புலாவ் தயார்.
மட்டன் வறுவல் மற்றும் தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...