எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

How to make Murukku Dough ( முறுக்கு மாவு )



How to Make South Indian Murukku Dough, 
For crispy Murukku/ Ribbon Pakoda / Thatai and More....

Ingredients

Idli Rice - 2 cups
Roasted Gram - 1 cup
Butter - 2 tbsps
Sesame seeds / Cumin seeds / Ajwain  - 1 tbsp
Rocksalt - appro .3/4 tbsp
Chilly Powder - 1 to 1 1/2 tbsp
Asafoetida - 1/4 tsp


1. Soak Rice for 3 to 4 hrs. Then,
Grind to thick batter adding chillypowder, salt and Asafoetida.

2. Powder Roasted gram finely ( Can sieve before using )

3. Melt the butter lightly.
( Can add hot oil instead of butter )

4. Mix altogether to form a soft dough.
( Perfect dough will not stick , even a bit in hand or bowl )

Tips:
 In case , if the rice batter is thinner, add some more roasted gram flour / Besan flour to form perfect dough.

Dough is Ready .
With this Single dough , 
change the patterns (  plates ) in Murukku maker,
 Prepare Chakli / Ribbon pakoda and more Patterns.

செய்முறை


2 கப் அரிசியை ஊறவைத்து, வடிகட்டி, 
அளவாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும்.
அதனுடன் 1 டே.ஸ்பூன் மிளகாய்தூள்,  1/2 முதல் 3/4 டே.ஸ்பூன் கல் உப்பு,
1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
( 3 , 4 ஆம் படத்தில், 2 முறை மிக்சியில், அரிசி அரைத்து கலந்தது )

அதிகமாக அரிசி அரைத்தால், க்ரைண்டரில் அரைக்கவும்.
மிளகாய் தூள் இல்லாமல் வரமிளகாய் சேர்த்து அரைக்கலாம்.




1 கப் பொட்டுகடலையை பொடியாக்கி , ( சலித்து ) வைக்கவும்.



2 டே.ஸ்பூன் வெண்ணெயை லேசாக உருக்கவும்.

மாவுடன் 1 டே.ஸ்பூன் எள் ( கருப்பு / வெள்ளை எள் )
அல்லது சீரகம் அல்லது ஓமம் சேர்க்கலாம்.
பின் பொட்டுகடலைமாவு, வெண்ணெய் சேர்த்து, 
நன்றாக கலக்கவும்.
மிருதுவான முறுக்கு மாவு கிடைக்கும்.

கையிலும், பாத்திரத்திலும் ஒட்டாமல் வரும்.

( ஒரு வேளை அரிசியை சிறிது இலக்கமாக ஆட்டிவிட்டீர்களா, கவலை வேண்டாம், மேலும் சிறிது பொட்டுகடலை பொடி அல்லது கடலை மாவு சேர்த்து சரி செய்யலாம். )
( வெண்ணெய் இல்லை என்றால், எண்ணெய்யை சூடு செய்து சேர்க்கலாம் )

இந்த மாவை முறுக்கு பிடியில் , தேவையான அச்சை போட்டு
சூடான எண்ணெயில் சுட்டி எடுக்கவும்.

எண்ணெய் நன்றாக காய்ந்திருக்க வேண்டும்.

முறுக்கு அச்சுகளை மாற்றி மாற்றி, விதவிதமாக செய்யலாம்.
இதே மாவில் சிறிது ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து, தட்டைமுறுக்கு செய்யலாம்.

பொட்டுகடலை, வெண்ணெய் சேர்ப்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.
அரிசியை அரைத்து செய்வதால், கடுக்கடுக் இல்லாமல் இருக்கும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...