செய்முறை
( ஓவனை சூடு செய்யவும் )
முதலில் பேசிக் கேக் கலவையை
தயார் செய்யவும்.
பின் அதனுடன்,
1 பெரிய கேரட்டை வெட்டி, மிக்சியில் கொரகொரப்பாக தூள் செய்து சேர்க்கவும்
மேலும் வாசனை மற்றும் சுவைக்கு, 1/2 ஸ்பூன் பட்டைபொடியை சேர்த்து கலக்கவும்.
வால்னட்டுகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
அணைத்தையும் நன்றாக கலந்து,
இதை அப்படியே பட்டர் பேப்பர் வைத்த ,
கேக் டின்னில் ஊற்றி பேக் செய்தால் கேரட் வால்னட் கேக் தயார்.
160*செ 35 முதல் 40 நிமிடம் பேக் செய்யவும்
குறிப்பு:
160 செ ல் , டின்னில் பட்டர் பேப்பர் வைத்து பேக் செய்வதால்,
கேக்கின் வெளிப்புறம் மென்மையாகவும், அதிகம் நிறம் மாறாமலும் வரும்.
அவரவர் ஓவனிற்கு தகுந்தார்போல் நேரம் மாறும்.
கேக் தயாரானதும் , 5 நிமிடம் கழித்து வெளியே எடுத்து , வயர் ரேக்கின் மேல் வைத்து ஆறவிடவும்.
அப்படியே வெட்டி பறிமாறலாம்,
அல்லது ஐசிங் செய்தும் பறிமாறலாம்.
{ குறிப்பு:
ஐசிங் செய்ய நினைத்தால், கேக் செய்யும் பொழுது,
வெண்ணெய் பாதியும், எண்ணெய் பாதியும் கலந்து செய்ய வேண்டும்.
வெண்ணை மட்டும் சேர்த்தால், ஐசிங் செய்து, ஃப்ரிஜ்ஜில் வைக்கும் பொழுது
கேக் கெட்டியாகி விடும் வாய்ப்பு அதிகம். }
பிறகு
ஐசிங் செய்ய , விப்ட் க்ரீமை தயாராக்கி வைக்கவும்
1 கப் விப்பிங்க் க்ரீமுடன் 1/2 கப் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து
வைக்கவும்.
ஐசிங் செய்முறை:
இந்த லிங்கை பார்க்கவும்.
கேக் ஆறியதும், ஓரங்களை வெட்டி, கேக்கை 3 பாகங்களாக வெட்டி வைக்கவும்.
முதல் பாகத்தில் சர்க்கரைத் தண்ணீரை, பரவலாக தெளிக்கவும்.
அதன் மேல் தயார் செய்த க்ரீமை தடவி,
அதன் மேல் கேக்கை வைத்து, மீண்டும் சர்க்கரை நீர், க்ரீம், என வரிசையாக செய்யவும்.
கடைசியாக கேக்கை சுற்றி , க்ரீம் பூசி, அதனை சம படுத்த
கத்தியை கொதிக்கும் நீரில் முக்கி எடுத்து, துணியில் துடைத்து,
ஈரம் இல்லாமல் , கத்தி சூட்டில் தடவி விடவும்.
மேலே பாதாம்,வால்னட் வைத்து அலங்கரித்து,
ஃப்ரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்
( ஃப்ரிஜ்ஜில் வைக்கும் பொழுது கேக்கை மூடி வைக்கவும் )
க்ரீம் நன்றாக செட் ஆனதும் , எடுத்து வெட்டி பறிமாறவும்.
Carrot Walnut Cake
To the Basic vanilla cake Mixture,
I added coarsely grounded Carrot, chopped walnuts and Cinnamon powder.
Bake the Cake.
Serve As it is Or
Apply some cream for extra Taste and serve.
The aroma of Cinnamon Powder beats the Cake.
Mmmm Yummy...
No comments:
Post a Comment