எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chicken Dum Briyani in Pressure cooker ( சிக்கன் தம் ப்ரியானி எளிதில் )


செய்முறை

1/2 கிலோ சிக்கனுடன், 1/2 கப் தயிர், மஞ்சதூள், 
1 டே.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
3 பட்டை, கிராம்,  1/2  ஸ்பூன் சோம்பு தூள், 
4 ஏலக்காய், 
1/2 ஸ்பூன் சீரகமிளகு,
1 டீ.ஸ்பூன் வரமிளகாய் தூள், 
1/2 ஸ்பூன் மல்லிதூள்,
1 ஸ்பூன் கரம்மசாலாதூள்
தேவையான உப்பு 
சேர்த்து பிரட்டி, 
1 மணி நேரம் ஊறவைக்கவும்.



குக்கரில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி,
 பட்டை, கிராம்,   ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து,
2 பெரிய வெங்காயம் மெலிதாக நறுக்கியதை சேர்த்து, நன்றாக 
வறுபடும் வரை விட்டு, 
அதில் பாதியை தனியாக எடுத்து வைக்கவும்.

குக்கரில் மீதமுள்ள வெங்காயதோடு,
சிக்கன் கலவையை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விடவும்.


பின் 1 தக்காளியை மெலிதாக நறுக்கி சேர்த்து, கொத்தமல்லி புதினா சேர்த்து,
பிரட்டி, தட்டம் போட்டு மூடி ,
சிறிது தண்ணீர் சேர்த்து, தொக்கு பதம் வரும் வரை வேகவைத்து ,
அடுப்பை அணைக்கவும்.

சிக்கன் , மசாலாவில் ஊறும் நேரத்தில், 
2 கப் பாஸ்மதி அரிசியை, 6 முதல் 10 முறை கஞ்சி போக கழுவி
 தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில், தண்ணீரை சூடு செய்து,
பச்சைமிளகாய் 

2 பட்டை,கிராம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்க்கவும்.
அதில் 2 ஸ்பூன் ஆயில், ஊறிவடித்த அரிசி , 2 ஸ்பூன் கல்உப்பு 
சேர்த்து, அடுப்பை ஹையில் வைத்து, 
 அரிசியை 90% வேகவிட்டு, வடித்து வைக்கவும்.

குறிப்பு:

அரிசி வேகும் நீரில் , எலுமிச்சை சாறு ஊற்றினால், சாதம் வெள்ளையாகவும் உதிரியாகவும் இருக்கும்.



பிறகு 
சிக்கன் மசாலாவில் 3/4 யை ,
ஒரு  பாத்திரத்தில் எடுத்து கொட்டி தனியாக வைக்கவும்.

குக்கரில் உள்ள சிக்கன் கலவையின்
 மேல் சாதத்தை உதிரியாக பரப்பி, 
அதன் மேல் பாதி சிக்கன் மசாலா, 
பொறித்து தனியாக எடுத்து வைத்த வெங்காயம்,கொத்தமல்லி போடவும்.

பிறகு சாதம் சிக்கன் ,என வரிசையாக அடுக்கி,
 பொறித்த வெங்காயாம், கொத்தமல்லிதூவி,
விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ அல்லது கலர் தூவி
 குக்கரை மூடி ( விசில் போட வேண்டும்) , 
அடுப்பை முழு சிம்மில் வைத்து, 15 --20 நிமிடம் வரை வைத்து ,
அடுப்பை நிறுத்தவும்.
 5 நிமிடம் கழித்து எடுத்து பறிமாறவும்.


பறிமாறும் பொழுது முழுமையாக கலந்து விடாமல், கரண்டியை விட்டு,
ஒவ்வொரு பாகமாக எடுத்தால்
கடையில் உள்ள பிரியாணி போல் வரும்.

குறிப்பு:
கரண்டியை  பாத்திரத்தின் கீழ் வரை விட்டு பார்த்தால் நீர் சுண்டி இருக்க வேண்டும், அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்

குங்குமப்பூ அல்லது கலர் சேர்ப்பதற்கு பதில், 
எலுமிச்சை சாறில் மஞ்சதூள் சேர்த்து கலந்து , கடைசியாக மேலே ஊற்றவும்.
Chicken Dum Briyani in Cooker

1.      Marinate 1/2 kg Chicken with turmeric powder, salt, 1/2 cup curd, 

and
 freshly grounded mixture of  6 flakes of ginger and garlic , 
3 pieces of cinnamon , cloves , 1/2 tsp powdered aniseeds, 4 Cardamom, 

1/2 tsp of Cumin seeds and black pepper,
1 tsp drychilly powder,
1/2 tsp dhaniya powder,
1 tsp garammasala powder,


Marinate well  (  keep aside for  1 hour  ) .

2.    Take 2 cups of Basmathi rice,

Wash the rice 8 to 10 times and 
Soak  it in water for 1/2 an hr.

In the other wide vessel , boil water ( water to the 3/4 th of vessel ),
add 2 tsps  of oil ,
 cinnamon cloves cardomom bayleaves, greenchillies......
squeeze some lemon,
Then add soaked rice , 2 tsps of rock salt
 mix 
Allow the rice to cook  till 90%,  keeping in high flame.
Off stove, strain well and keep the rice aside.


3.      Heat 2 laddles of oil and season  cinnamon cloves cardomom bayleaves.
Add 2 Sliced Onions and fry well.
( take and keep half the fried onions separately , to use while layering for DUM )

Then add marinated chicken, saute for 2 mts.
Then add a sliced tomato and coriandermint leaves.
Saute and allow it to cook.
Add little water if required.
Cook till the masala gets thick too.

Then
In a wide vessel, put 3/4 of the chicken with masala and keep aside.

Now layer in Cooker:

Leave 1/4 portion of chicken masala in the same cooker  ,
then spread some  rice on top,
Add chicken masala, fried onions, corianderleaves
Again layer with chicken masala, rice, ............

Then finally sprinkle some coriander leaves and Fried onions ( Mentioned above )
Close with lid lightly, put Whistle also but keep the  stove in full low simmer 
and leave for 15 to 20 mts
till rice is 100% done and watery in masala get dries.

Note : If we place the laddle till the bottom of the vessel, we find the masala gets dried.

Off the Stove and keep as it is for 5 more minutes.

Serve hot with Raita or Gravey.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...