செய்முறை
1. 1/4 கிலோ (முல் இல்லாத ) மீனை வெட்டி வைக்கவும்.
அதே போல் வெங்காயம், தக்காளி ( விதை இல்லாமல் ), குடைமிளகாயை
வெட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் , 1/4 கப் கெட்டி தயிர், உப்பு, 1 ஸ்பூன் மிளகாய்தூள்,
சிறிது மஞ்சள்தூள், 3 டீ.ஸ்பூன் கடலைமாவு,
1 ஸ்பூன் கரம்மசாலாதூள், சிறிது கசூரிமேத்தி,
சிறிது ஏலக்காய்தூள்
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
2 ஸ்பூன் எலுமிச்சைசாறு
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.
3. பின் அதனுடன் 2 ஸ்பூன் ஆயில் விட்டு கலந்து,
மீன் துண்டுகளை அதில் போட்டு, பிரட்டி எடுத்து, ஒரு டப்பாவில் போட்டு மூடி 2 மணி நேரம் ஃப்ரிஜ்சில்,வைக்கவும்.
4. மீதமான கலவையில் காய்களை பிரட்டி, ஒரு டப்பாவில் போட்டு மூடி சிறிது நேரம் ஃப்ரிஜ்சில்,வைக்கவும்.
( குறிப்பு:
கடலை மாவும் ஏலக்காய் தூளும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
மசாலா கெட்டி யாக இருக்க வேண்டும் )
சுமார் 2 மணி நேரம் ஊறியதும்,
ஓவனை 350 F ல் சூடு செய்யவும்.
மீன் மற்றும் காய் பிரட்டலை , டிக்கா குச்சியில் சொருகி,
ஓவனில் 20 முதல் 30 நிமிடம் வரை ( நன்றாக பேக் ஆகும் வரை )
வைத்து , எடுத்து பறிமாறவும்.
( நடுவில் எடுத்து குச்சியை . திருப்பி திருப்பி வைக்கவும் )
தக்காளி சாஸ் வைத்து பறிமாறவும்.
Fish Tikka Recipe
1. Clean and dice the boneless fish ( 1/4 to 1/2 kg )
Likewise dice the Onion, tomato and Capsicum .
2. Make a paste with
1/4 cup Hung Curd ( Thick Curd )
Salt, Turmeric powder,
1 tsp Chilly powder, 1 tsp Garam masala powder,
Some Kasoori Methi, Cardamom powder,
1/2 tsp of Gingergarlic paste
3 tsps of Besan flour,
2 tsps of Lemon Extract
Finally add 2 to 3 spoons of Oil , Mix well.
3. Marinate the Fish pieces with this masala and Store in a box .
Keep inside fridge for 1 to 2 hrs.
With the left over masalas, Marinate the veggies and
Store in a box .
Keep inside fridge for 1 to 2 hrs.
4. Preheat the Oven at 350 F
5. Arrange the fish and veggies in Tikka Sticks,
Allow it to bake for 20 to 30 mts till well done.
( Inbetween, Roll the sticks for uniform baking )
Serve Hot with Sauce.
No comments:
Post a Comment