எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Instant Spicy Rava Paniyaram ( ரவா பணியாரம் )



செய்முறை 

1 கப் வெள்ளை ரவை 
1/4 கப் அரிசிமாவு
உப்பு
இவற்றை கலக்கவும்.

1/2 கப் புளித்த தயிர் சேர்த்து கலந்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதம் கலக்கி , 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

குறிப்பு:
10 நிமிடத்தில் செய்ய வேண்டும் என்றால், வெதுவெது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும், சீக்கிரமாக ஊறிவிடும்.


பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,
கடுகு, உ.பருப்பு, க. பருப்பு தாளித்து
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,
பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி,
அடுப்பை அணைத்து, கொத்தமல்லி சேர்த்து, பிரட்டி
ஆறவிடவும்.

குறிப்பு:
விருப்பப்பட்டால் காய்களை பொடியாக நறுக்கி, வெங்காயத்தோடு சேர்த்து வதக்கி , மாவுடன் சேர்க்கவும்.

பிறகு,
.ஆறியதும், மாவில் கொட்டி, சிறிது சமையல் சோடா சேர்த்து கலந்து,
பணியாரம் செய்யவும்.


பஞ்சு போல் மெத்தென இருக்கும்.

நிமிடத்தில் தயாராகும் தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.

Instant Rava Paniyaram

Mix together, a cup of Rava with 1/4 cup of Riceflour and salt as needed.
Add 1/2 cup of sour curd and water .
Bring the batter to idli batter consistency and let it soak for an hour.

( To Prepare immediately: Add warm water to batter , to soak faster )


Then season and saute onion chillies and any veggies  if  preferred.
Saute lightly , let it cool and add it to batter.
Add a pinch of cooking soda and mix the batter.

Make fluffy paniyaarams.

1. Heat paniyaram pan, add some oil , then pour in batter to 3/4 th.

2. Allow it to cook on one side and turn to other side.
Cook well.

Serve hot with Coconut chutney or any spicy chutney.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...