எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pineapple Pastry ( அன்னாசி பழ கேக் )


செய்முறை

ஓவனை சூடு செய்யவும்


பொருட்கள் அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

1.  1 கப் மைதா மாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங்பொடி சேர்த்து சலிக்கவும்.
இதனுடன் 1 கப் பொடித்த சர்க்கரை சேர்த்து , கலந்து வைக்கவும்.

2.  ஒரு பாத்திரத்தில் 
1 முட்டை, 1 ஸ்பூன் வென்னிலா / அன்னாசி பழ  எசன்ஸ், 3/4 கப் 
 எண்ணெய் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3. பிறகு அதில் மாவு கலவை மற்றும் பால் ( 1/4 முதல் 1/2 கப்)
சேர்த்து பஜ்ஜிமாவு பதம் வருமாறு கலக்கி வைக்கவும்.

இது தான் பேஸிக் கேக் கலவை.

  இதை அப்படியே வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்து,
கேக் டின்னில் ஊற்றி பேக் செய்தால்   கேக் தயார்.

160*செ 35 முதல் 40 நிமிடம் பேக் செய்யவும்
அவரவர் ஓவனிற்கு தகுந்தார்போல் நேரம் மாறும்.






ஐசிங் செய்ய :
 விப்ட் க்ரீமை தயாராக்கி வைக்கவும் 


1 கப் விப்பிங்க் க்ரீமுடன் 1/2 கப் ஐசிங் சர்க்கரை 
சேர்த்து நன்றாக அடித்து
வைக்கவும்.




அன்னாசி பழத்தை துண்டுகளாக்கி,  சர்க்கரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின் வடித்து தண்ணீரை தனியாக வைக்கவும்.

கேக் ஆறியதும்,  கேக்கை 3 பாகங்களாக வெட்டி வைக்கவும்.
துகள்களை எடுத்து விடவும்.


முதல் பாகத்தில்  பழங்கள் ஊறிய சர்க்கரைத் தண்ணீரை, 
பரவலாக தெளிக்கவும்.
அதன் மேல் தயார் செய்த க்ரீமை தடவி, 
பழங்களை தூவவும்.

அதன் மேல் கேக்கை வைத்து, மீண்டும் சர்க்கரை நீர், க்ரீம், 
என வரிசையாக செய்யவும்.

கடைசியாக கேக்கை சுற்றி , க்ரீம் பூசி, 
அதனை சம படுத்த
கத்தியை கொதிக்கும் நீரில் முக்கி எடுத்து, துணியில் துடைத்து,
ஈரம் இல்லாமல் , 
கத்தி சூட்டில் தடவி விடவும்.

மேலே பழங்களை வைத்து அலங்கரித்து, 
ஃப்ரிஜ்ஜில் சிறிது நேரம் வைக்கவும்
( ஃப்ரிஜ்ஜில் வைக்கும் பொழுது கேக்கை மூடி வைக்கவும் )

க்ரீம் நன்றாக செட் ஆனதும் , எடுத்து வெட்டி பறிமாறவும்.


Method

Heat oven / convection mode @ 160 C.
Lightly grease and keep some butter paper in a cake pan .

For the cake:

To 1 cup of APF/ Maida,  add a spoon of baking powder and sieve 3 times.
Add 1 cup of powdered sugar and mix evenly.
Keep this dry mixture aside.

Then

Beat together a egg with a spoon of Vanilla essence and 3/4th cup of Oil ,  well.
Then
Add dry ingredients and 1/4 to 1/2 cup of milk to make the batter.
It should not be too thick or thin.

Transfer to greased cake tin .

Bake at  160*c  for about 35 to 40 mts  until toothpick inserted in center of cake comes out clean.
 Cool in pan for 15 minutes and 
then cool the cake on a wire rack till it cools completely.

Note : When the cake is in oven, Make the Pineapple Process.

Soak the chopped pineapple in Sugar syrup.
( Dissolve some sugar in warm water, add chopped pineapples )

After 1 hour , strain the juice and pieces seperatly and keep aside.


Then

Cut the Hard edges of the cake .
Slice the cake as 3 layers and gently brush off excess crumbs.


Keep the Whipped cream ad Pineapple ready.



Then start arranging the layers:

On a layer of cake , sprinkle the ( Soaked ) Syrup evenly.
Apply the Cream.
Sprinkle pineapple pieces on top ( strain well the fruits without syrup )

Again keep a layer of cake and follow the same Procedure.

Finally , 
apply the cream around the cake and decorate with pineapple and cranberries
or as liked.

( Tips: Dip the knife in hot water, wipe it and apply on Cream for uniform leveling )

Set in Refrigerator for sometime till sets 
 then 
Cut & Serve .









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...