எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Arisiparuppu Rice ( அரிசிபருப்பு சாதம் )


Kongu style Arisiparuppu Rice.
Easy and Tasty Recipe.

Ingredients

Rice - 1 cup
Toor dal - 1/4 cup
Water to cook - 3 cups

Small Onions - 10 to 15
Big Onion medium size - 1
Tomato -1
Garlic flakes - 4
Greenchillies - 2 or 3

 coriander leaves

Turmeric powder - 1/4 tsp
Rock salt - 1 tsp

Oil - 2 tbsps
Mustard seeds - 1/2 tsp
Curryleaves, Dry chilly -1 





செய்முறை

1 கப் அரிசியுடன் 1/4 கப் துவரம் பருப்பை சேர்த்து, கழுவி,
பின் 3 கப் தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பொடியாக இருக்கும் சின்ன வெங்காயத்தை முழுதாக உரித்து வைக்கவும்.
1 பெரிய வெங்காயத்தை  நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.
4 பல் பூண்டை உரித்து வைக்கவும்.
தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை நறுக்கி வைக்கவும்.


அடுப்பில் குக்கரை வைத்து , எண்ணை ஊற்றி , காய்ந்ததும்,
கடுகு கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.

அதில் தயாராக உள்ள வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்
சேர்த்து 1 நிமிடம் வதக்கி,
அதனுடன் மஞ்சதூள், சாம்பார் தூள்
சேர்த்து பிரட்டியவுடன்,
ஊறிய அரிசிபருப்பை , அந்த நீருடன் சேர்க்கவும்.
உப்பு , கொத்தமல்லிதழை சேர்த்து, கலக்கி,
1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
( குக்கருக்கு தகுந்தார் போல் , விசிலின் எண்ணிக்கை மாறும்)

விசில் அடங்கியதும், சாதத்தை சமமாக பிரட்டி, 
2 நிமிடம் மூடி வைத்து, பின்
சூடாக , சிறிது நெய் விட்டு பறிமாறவும்.
இதனுடன் அப்பளம் / ஊறுகாய் / தயிர் / முட்டை பொடிமாஸ்
வைத்து பறிமாறலாம்.


ArisiParuppu Rice 

1. clean and soak , rice and dal together with 3 cups of  cooking water.

2. Meanwhile , prepare other ingredients.
Peel s.onions, Slice the big onion, tomato, green chillies, garlic and keep aside.

3. Heat the oil in cooker, season mustard seeds, drychilly and curryleaves.
Add the ingredients which is kept aside ( as in No.2 )
saute lightly.

4. Add tumeric and sambar powder.
Mix and immediately add the rice and dal with the soaked water.
Add salt and coriander leaves.

5. close with lid and leave a whistle in cooker.
Off the stove.
Once the pressure gets released, open and mix evenly.
Again close with lid for 2 mts and then serve hot with some ghee .

Serve with Appalam / Chips / Pickles / Curd / Scrambled egg.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...