எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Plantain flower Chutney / Vaazhaipoo chutney / வாழைப்பூ மல்லி சட்னி


வாழைப்பூ மல்லி சட்னி

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப் / Plantain flower

உளுந்து பருப்பு - 2 மேஜைகரண்டி / Uraddal
கடலை பருப்பு - 2  மேஜைகரண்டி / bengalgram
சீரகம் - 1/2 தேக்கரன்டி / cuminseeds
காய்ந்த மிளகாய் -3 / drychillies
கறிவேப்பிலை / curryleaves
கொத்தமல்லி தழை - 1/2 கப் / corianderleaves
தேங்காய் துருவல் - 1/2 கப் / Shredded coconut
புளி - ஒரு சிறிய உருண்டை / tamarind
உப்பு - ருசிக்கேற்ப / salt

எண்ணெய் - 3 தேக்கரன்டி / oil


செய்முறை

நரம்பு நீக்கி சுத்தம் செய்த வாழைப்பூவை , மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
பின் பிளிந்து எடுத்து, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
தனியாக வைக்கவும்.


வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தனலில் அடுப்பை வைத்து,
பருப்புகள், சீரகம், மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
வறுத்து நிறம் மாறியதும், கொத்தமல்லி தேங்காய்துருவல் புளி சேர்த்து, கலந்து
அடுப்பை அணைக்கவும்.



ஆறியதும், இக்கலவையோடு உப்பு , வாழைப்பூ சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சூடான சாதத்துடன் பறிமாறலாம்.

இட்லி , தோசையுடன் பறிமாற , சட்னியில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.



Method

Clean the Flower.
Remove the Stamen and small outer cover from plantain florets.
Put it in water with some buttermilk mixed with it.

1. Squeeze the florets from buttermilk water, saute with some oil in a pan.
once done, off the stove and allow it to cool.

2. With some oil, roast the bengal gram, uraddal, Jeera, drychillies and curryleaves till brown.
(Keep in medium heat and roast )

Then add coriander leaves, shredded coconut and tamarind.
Mix together, allow it to cool.

3. Grind Vazhaipoo and roasted ingredients together , adding salt with it.
Make a thick chutney , serve with Hot rice.

Add some water with chutney to serve with idly, dosa....




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...