எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Badusha / பாதுஷா



                                       பாதுஷா

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 கிலோ
வெண்ணெய் - 400 கிராம்
சமையல் சோடா - 3/4 டீ.ஸ்பூன்
சர்க்கரை 1/2 கப் + 5 ஏலக்காய் = பொடி செய்யவும்
தயிர் - 1 கப்

பாகு செய்ய:
சர்க்கரை- 1 கிலோ
தண்ணீர் 
எலுமிச்சை பழம் - 1

எண்ணெய் - 1 லிட்டர்


                                    செய்முறை

சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடித்து வைக்கவும்.
வெண்ணையும் சமையல் சோடாவையும் ஒன்றாக , மிருதுவாக வரும் வரை அடிக்கவும்.
பின் மைதா மாவை சேர்த்து, நன்றாக கலக்கவும்.


பின் சர்க்கரை பொடியை சேர்த்து கலக்கவும்.
பின் தயிர் சேர்த்து பிசையவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குலாப்ஜாமூன் மாவு போல் மிருவாக பிசைந்து , 1 மணி நேரம் மூடி வைக்கவும்.


குறிப்பு:
பிசைந்த மாவை உள்ளே பார்த்தால் செதில்செதிலாக இருக்கும்.



ஊறிய மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, பின் கட்டை விரலால் நடுவில் அழுத்தி வைக்கவும் 
அல்லது உருட்டிய மாவை அமுக்கி , ஓரங்களை மடக்கி வைக்கவும்.
எல்லா உருண்டைகளையும் தயாராக வைக்கவும்.

மாவு காயாமல் இருக்க , மூடி வைக்கவும்.



ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய்யை ஊற்றி, மிதமான தனலில் சூடு செய்யவும்.

எண்ணெய் சூடாகும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து 
சர்க்கரையின் பாதி அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, ஒரு கம்பி பதம் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
( பாகு கெட்டியாகமல் இருக்க, சர்க்கரையின் அழுக்கை நீக்க , சர்க்கரை கொதிக்கும் பொழுது எலுமிச்சை சாறு சேர்க்கவும் )


எண்ணெய் சூடானதும், உருட்டி வைத்த பாதுஷாக்களை போட்டு, மிதமான சூட்டில் பொறித்து எடுத்து, பாகில் சேர்த்து அமுக்கி விடவும்.
5 நிமிடம் ஊறியதும், பாதுஷாக்களை தனியாக எடுத்து, ஒரு தட்டில் அடுக்கவும்.
ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடுக்கி, மூடி வைக்கவும்.




Badusha


To 1/2 cup of sugar , add 5 cardamoms and powder it.

To 400 gms of butter add 3/4 tsp of cooking soda and beat well till fluffy texture.
Add 1 kg Maida and mix well till crumble texture.
Add powdered sugar, mix well.
Add a cup of curd and mix well.
Add required water and make a soft dough .
( It will be flaky texture inside the tough, perfect texture for making badusha )

Let the dough rest for 1 hour.

Once dough is ready, make small balls and shape it .
Heat oil in medium heat.
On the other side, make sugar syrup till single string consistency.
(Add 1/2 the qty of water to the sugar )
Squeeze some lemon in syrup and keep aside.

Once oil comes to perfect heat, fry the Badushas in medium heat till golden brown.
once fried, add it to syrup and immerse it.

Fry the next batch in oil.
Soak the badushas till next set of batch is ready.
strain the badushas from syrup and arrange in a tray.
Let it cool.
Store it in air tight container.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...