தேவையான பொருட்கள்
பஜ்ஜிமிளகாய் - 3 / Bajji mirchi -3
விழுதாக அரைக்க: For paste
தேங்காய் - 1/4 கப் / coconut - 1/4 cup
வறுத்த வேர்கடலை - 1/4 கப் / roasted peanut - 1/4 cup
வறுத்த வெள்ளை எள் - 1/4 கப் / roasted sesame seeds - 1/4 cup
மசாலா செய்ய: For gravy
பெரிய வெங்காயம் -1 / Big onion -1
சீரகம் - 1/2 ஸ்பூன் / cumin seeds - 1/2 tsp
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் / gingergarlic paste - 1 tsp
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் / turmeric powder - 1/4 tsp
மிளகாய்தூள் - 1 ஸ்பூன் / chillypowder - 1 tsp
மல்லிதூள் - 1.5 ஸ்பூன் / dhaniyapowder - 1.5 tsp
கரம்மசாலா/ சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன் / masala powder- 1 tsp
உப்பு / salt
தக்காளி-1 / Tomato -1
எண்ணெய் - 3 ஸ்பூன் / oil - 3 tsp
செய்முறை
தேங்காய், எள், வேர்கடலை விழுதாக அரைக்கவும்.
பஜ்ஜி மிளகாயை நறுக்கி, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, வதக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சிபூண்டு விழுது, மசாலாதூள்கள் அணைத்தையும் சேர்த்து கலக்கவும்.
பின் தக்காளி சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து கலந்து, 10 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும்.
மசாலா பச்சைவாசனை இல்லாமல் பதமாக வந்ததும், வதக்கிய பஜ்ஜி மிளகாய் சேர்த்து கலக்கி, 5 நிமிடம் மூடி வைத்து, பின் அடுப்பை அணைக்கவும்.
சுவையான பஜ்ஜிமிளகாய் மசாலா தயார்.
இதனை சப்பாத்தி, புலாவ், இட்லி, தோசையுடன் பறிமாறலாம்.
Grind coconut, peanuts, sesame seeds to a fine paste.
Chop and saute the bajji mirchi with some oil till half cooked.
Then
In a kadaai, heat oil, add cumin seeds, onion and saute well.
Add gingergarlic paste, all masala powders, mix well.
Add tomato, salt and saute well in medium flame.
Add some water and allow it to boil.
Now add grounded paste, mix , close and keep in simmer for 10 minutes.
Add sauted mirchi, mix and cover it for 5 minutes,
then off the stove.
Tasty gravy is ready to serve with Naan, roti, pulao, briyani, idli, dosa,....
No comments:
Post a Comment