எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் ஃபாண்டியு



சாக்கலேட் ஃபான்டியு

நாம் பெரிய மால்களில் ஃபௌடென் சாக்கலேட் பார்த்திருக்கிறோம், ருசித்திருக்கிறோம். ஃபௌடென் செட் இல்லாமலேயே நம் வீட்டிலேயே அதை செய்து குழந்தைகளை குஷிப்படுத்தலாமா.........

தேவையான பொருட்கள்

சாக்கலேட் பார் – 50 கிராம்
( சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கும் அல்லது டைரிமில்க் சாக்கலேட் உபயோகபடுத்தலாம்)

ஃபெரஷ் க்ரீம் – 1 ½ டே.ஸ்பூன்
(சிறிய பாக்கெட்டில் கிடைக்கும்)

பால் – 1 டே.ஸ்பூன்


டிப் செய்ய : கட் செய்த

கேக் , திராச்சை, ஆப்பிள்
(வேறு பழங்களும் பயன் படுத்தலாம்)
ஃபோர்க் (அ) ஸ்டிகில் குத்தி ரெடியாக வைக்கவும்.



செய்முறை:


ஒரு நான்ஸ்டிக் பேனில், ஃபெரஷ் க்ரீம் மற்றும் பாலை மிதமான தனலில் சூடுசெய்யவும்.பின் அதில் சாக்கலேட்டை போட்டு உருகி
சாஃஸ் பதம் வரும் வரை கிளறவும்.






ஃபோர்க் (அ) ஸ்டிகில் குத்தி ரெடியாக வைத்த கேக் மற்றும் பழங்களை டிப் செய்து உடனே பறிமாறவும்.




ஆறினால் கெட்டியாகும், அப்பொழுது சிறிது ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கொள்ளவும்.

( நான் சாக்கலேட் கேக் செய்திருந்ததால் அதை பயன் படுத்தினேன்.
வேறு ஃப்லேவர் கேக்கூட பயன்படுத்தலாம்.)

குறிப்பு:
  1.     இக்கலவையில் ஒரு துளி ஆரஞ்ச் எசென்ஃஸ் சேர்த்தால், இது சாக்கலேட் ஆரஞ்ச் ஃபாண்டியு.
  2.     இக்கலவையில் ஒரு துளி இன்ஃஸ்டன்ட் காஃபி தூள் சேர்த்தால், இது மோச்சா  ஃபாண்டியு.






2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...