எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Soya Paneer Gravy / சோயா பன்னீர் கிரேவி



தேவையான பொருட்கள்

சோயா -  1 கப்
பன்னீர் ( செய்முறை ) -  1 கப்

மசாலா அரைக்க:

எண்ணெய் 
வெங்காயம் - 1 கப்
இஞ்சிபூண்டு - 6 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
சோம்பு - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 3

தக்காளி - 1/2 கப்
மல்லிதூள் - 2 தேக்கரண்டி

தாளிக்க: 
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை
கசூரிமேத்தி
சர்க்கரை - 1/2 ஸ்பூன்


செய்முறை

சோயாவை சுடு தண்ணீரில் ஊறவைக்கவும்.
பன்னீரை தயாராக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் மல்லிதூள் தவிர,
மசாலா அரைக்க தேவையான பொருட்களை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து, மல்லி தூள் சேர்த்து கலந்து , ஆறியதும் 
மிக்சியில் விழுதாக அரைக்கவும்.




பின் 
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து,
அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி, 
பின் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சோயாவை பிளிந்து எடுத்து, இரண்டாக வெட்டி, 
மசாலாவில் சேர்த்துவேகவைக்கவும்.

சோயா வெந்தவுடன், பன்னீர் சேர்க்கவும்.
கொத்தமல்லி, கசூரிமேத்தி , சிறிது சர்க்கரை 
சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து
பின் அடுப்பை அணைக்கவும்.

சுவையான சோயாபன்னீர் கிரேவி தயார்.
சப்பாத்தி, நாண், புலாவுடன் பறிமாறலாம்.

Click here for homemade Paneer recipe



SoyaPaneer Gravy

Soak Soya in hot water.

Heat oil in kadai, add a cup of chopped onions, 3 drychillies, gingergarlic pods, 
2 cinnamon, cloves, cardamom, a tsp of  fennelseeds
Saute well.
Add 1/2 cup of tomatoes, saute well.
off the stove.
Add 2 tsps of Dhaniyapowder, mix .
Allow it to cool and grind as paste.

Squeeze soya and cut it to half.
keep the paneer ready

Then
Heat oil in a kadai, add cumin seeds.
Add grounded paste, saute well.
Add water, salt , mix and allow it to boil.
Add soya and cook well.
Then keep in mediumflame,
Finally add paneer cubes, coriander leaves , kasoorimethi , sugar, 
mix and close with lid for 5 mts.
Off the stove.

Serve with Chapathi, Naan, Bread , pulao....



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...