எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பாவ் பாஜி மசாலா / Pavbhaji masala



செய்முறை



2 கப் காய் கலவையுடன் ( கேரட், பட்டாணி, காலிஃபலவர், உருளைக்கிழங்கு)
உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, வேகவைத்து, தண்ணீரை வடித்து, காயை மசித்து வைத்து கொள்ளவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு மிகுதியாக சேர்க்க வேண்டும்

பின்



பின் ஒரு கடாயில் ,2 மேஜைகரண்டி வெண்ணையும், 2 மேஜைகரண்டி எண்ணெய்யும் சேர்த்து சூடானதும், 1/2 ஸ்பூன் சீரகம் தாளித்து,1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் , 1 பச்சைமிளகாய் சேர்த்து, நன்றாக வதங்கியதும், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 கப் குடை மிளகாய் நறுக்கியது, சேர்த்து லேசாக வதக்கி, 
பின் 2 கப் தக்காளி , உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், சிறிது மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 3 அ 5 ஸ்பூன் பாவ்பாஜி மசாலா தூள் (தேவைக்கேற்ப), உப்பு சேர்த்து



வதக்கியதும், காயை சேர்த்து, 
காயை வேகவைத்து வடித்த நீர், கொத்தமல்லி, 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் விடவும்.
அடுப்பை அணைக்கும் முன் 1/2 மூடி எலுமிச்சை பழத்தை பிளியவும்.




மிகவும் கெட்டியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

பின் ஒரு தவாவில், வெண்ணெய் இட்டு, பாவ் பன்னை இரு புறமும் லேசாக வறுத்து, சூடாக
 பாஜியுடன் சிறிது வெங்காயம், வெண்ணெய், கொத்தமல்லி தூவி, எலுமிச்சையும் வைத்து பறிமாறவும்.










            பாவ் பன் செய்முறை : 
கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
பாவ் பன்   ,    கோதுமை பாவ் பன்














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...